கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கண்டித்து விறகு அடுப்பில் சமைத்து போராட்டம்!

திருப்பூர்: கேஸ் விலைஉயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: கேஸ் விலைஉயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கேஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் கேஸ் விலை உயர்வால் சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இதனால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



`பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற பழமொழி பா.ஜ.க ஆட்சியில் `புதியன கழிதலும் பழையன புகுதலும்' என்ற புதுமொழியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...