வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ. 10 லட்சம் மோசடி: கணவன், மனைவியிடம் போலீஸ் விசாரணை!

கோவை: வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ஆசைவார்த்தை கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கணவன், மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ஆசைவார்த்தை கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கணவன், மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (வயது 27). இவர் மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளேன். இதன் மூலம் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா என்பவர் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் எனது கணவர் கணேசபாண்டியன் ஆளுங்கட்சியில் உள்ளார். அவருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பெரிய அதிகாரிகளுடன் பழக்கம் உள்ளது. நீங்கள் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உங்களுக்கு கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய நான் அவர்களது வங்கிக் கணக்கில் 6 லட்சம் ரூபாய் வரை படம் செலுத்தினேன். மீதமுள்ள பணத்தை ஆனையூர் ரோஜா மலர் நகரில் உள்ள அவர்களது வீட்டில் நேரில் ரொக்கமாகக் கொடுத்தேன். நான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்ட அவர்கள் எனக்கு வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தர மறுத்துவிட்டனர். எனவே நான் நேரடியாக மதுரைக்கு வந்து அவரிடம் எனக்கு வேலை வேண்டாம், நான் கொடுத்த 10 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பித் தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பணம் கொடுக்க மறுத்தது மட்டுமன்றி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் கணேச பாண்டியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...