மதுக்கரையில்கஞ்சா விற்ற வாலிபர் கைது!

கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுக்கரை இன்ஸ்பெக்டர் முருகேசன் உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் மற்றும் போலீசார் மதுக்கரை பஸ் நிலையம் அருகே தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்தில் நின்ற வாலிபர் ஒருவர் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினார்.

உடனே போலீசார் விரட்டிச் சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில் அவரிடம் கஞ்சா இருந்ததுதெரியவந்தது. விசாரணையில் அவர் கணபதி நல்லா பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 24) என்பதும் மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...