கோவை காந்திபுரம்‌ 3வது வீதி பகுதியில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்; அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி திறந்து வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ 3வது வீதி பகுதியில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்கள்‌.

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ 3வது வீதி பகுதியில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ,.ப., அவர்கள்‌ தலைமை வகித்தார்கள்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ முன்னிலை வகித்தார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்‌ அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌ அவர்கள்‌ வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:


கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்‌ பொருட்டு பாலங்கள்‌ கட்டப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில்‌ 5 அரசு கல்லூரிகள்‌ திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும்‌ வீடு கட்டும்‌ திட்டத்தில்‌ இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வீடுகள்‌ கோவை மாவட்டத்தில்‌ கட்டித்‌ தரப்பட்டுள்ளது. 



இது போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களில்‌ ஒன்றான முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அம்மா மினி கிளினிக்குகளை 14.12.2020 அன்று சென்னை மாநகரிலும்‌ 16.12.2020 அன்று சேலம்‌ மாவட்டத்திலும்‌ துவக்கி வைத்துள்ளார். 



கிராமங்கள்‌ மற்றும்‌ நகரப்‌ பகுதிகளில்‌ வாழும்‌ ஏழை, எளிய மக்களின்‌ உடல்‌ நலனை கருத்தில்‌ கொண்டு சிகிச்சைக்கு வருபவர்களின்‌ வழியும்‌, ஏற்படும்‌ சிரமம்‌, செலவு மற்றும்‌ நேரம்‌ இவைகளை குறைக்கும்‌ பொருட்டு இந்த அம்மா மினி கிளினிக்குகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. சாதாரண காய்ச்சல்‌, தொற்று நோய்‌ போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மினி கிளினிக்குகள் பயன்படுகின்றது. இந்த அம்மா மினி கிளினிக்குகள்‌ ஏழை, எளிய மக்கள்‌ அதிகம்‌ வசிக்கும்‌, ஆரம்ப சுகாதார நிலையம்‌ இல்லாத இடங்களில்‌ அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில்‌ கோவை மாவட்டத்திற்கு மட்டும்‌ 70 மினி கிளினிக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதில்‌ 5 நடமாடும்‌ கிளினிக்குகள்‌ ஆகும்‌.



இதில்‌ முதற்கட்டமாக மாநகரப்பகுதிகளில்‌ 7 மினி கிளினிக்களும்‌, ஊரகப்பகுதிகளில்‌ 30 மினிகிளினிக்குகளும்‌ திறக்கப்பட உள்ளது. தற்போது மாநகராட்சி பகுதிகள்‌ மற்றும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

அம்மா மினி கிளினிக்கில்‌ ஒரு மருத்துவர்‌, ஒரு செவிலியர்‌ மற்றும்‌ ஒரு மருத்துவமனை பணியாளர்‌ பணிபுரிவார்கள்‌. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில்‌ அம்மா மினி கிளினிக்குகள்‌ செயல்படும்‌ கிராமப்பகுதி மற்றும்‌ பேரூராட்சி பகுதிகளில்‌ காலை 8 மணி முதல்‌ மதியம்‌ 12 மணி வரையிலும்‌ மாலையில்‌ 4 மணி முதல்‌ 7 மணி வரையிலும்‌ கிளினிக்குகள்‌ செயல்படும்‌. மாநகராட்சி மற்றும்‌ நகராட்சிகளில்‌ மேலும்‌ ஒரு மணி நேரம்‌ கூடுதலாக அதாவது இரவு 8 மணி வரை இயங்கும்‌. இதனால்‌ ஏழை மக்கள்‌ தங்களது அன்றாட பணிக்கு செல்வதற்கும் முன்னதாகவும்‌ பணி முடிந்து வீடு திரும்பிய பின்‌ செல்வதற்கும்‌ பயனுள்ளதாக இருக்கும்‌.

அம்மா மினி கிளினிக்கில்‌ மருத்துவப்‌ பரிசோதனை செய்த பின்னர்‌ உடனுக்குடன்‌ மருந்து மாத்திரைகள்‌ வழங்கப்படும்‌. தொற்று நோய்களுக்கான சிகிச்சை போன்ற நோய்கள்‌ தொடர்பான அனைத்து சிகிச்சை சிறு காய்ச்சல்‌ மற்றும்‌ சளி காய்ச்சல்‌ ஆகியவற்றிற்கான சிகிச்சை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றுக்கான சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள்‌, மகளிர்‌ குழந்தைகளுக்கான பொதுவான சிகிச்சை, வயது முதிர்ந்தவர்களுக்கான சிகிச்சைகள்‌ வழங்கப்படும்‌.

சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம்‌ ஆகியவற்றுக்கு மாத்திரைகள் இங்கு பெற்றுக்‌ கொள்ளலாம்‌. அதேபோல, இரத்தத்தில்‌ உள்ள சர்க்கரை அளவு, ரத்த அளவு அதாவது இரத்த சோகை உள்ளதா என்பதற்கான பரிசோதனை, சிறுநீரில்‌ உள்ள சர்க்கரை மற்றும்‌ அல்புமின்‌ அளவு பரிசோதனை, சிறுநீர்‌ மூலம்‌ கர்ப்பத்தை உறுதி செய்யும்‌ சோதனை போன்ற பரிசோதனைகள்‌, குறிப்பாக ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்‌ காய்ச்சல்‌, சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சிறு காயங்கள்‌ ஆகியவற்றுக்கான மருந்துகளும்‌ உள்ளன. மேலும் தொற்று நோய்களான சர்க்கரை மற்றும்‌ உயர்‌ ரத்த அழுத்த மாத்திரைகள்‌ போதுமான அளவு உடனுக்குடன்‌ வழங்கப்படும்‌.



இந்நிகழ்ச்சியில்‌ மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, நகர்‌ நல அலுவலர்‌ ராஜா, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. 

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...