கோவை: மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி கடந்த 16ம் தேதி முதல் கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் இன்று வரை நான்கு நாட்களுக்கு ரூ.120 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

இதனிடையே, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வரும் 21ம் தேதி (திங்கள்கிழமை) முதல் தற்காலிகமாக விலக்கி கொள்வது என பவுண்டரி தொழிற்கூடங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கம் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:
பவுண்டரி மூலப்பொருட்களான பிக் அயர்ன், ஸ்கிராப், கோக் மற்றும் சார்பு பொருட்களின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இந்த விலை ஏற்றத்தால் பவுண்டரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதனிடையே, வரும் 21ம் தேதி (திங்கள்கிழமை) முதல் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்வது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொறியியல் தொழிலுக்கு முதன்மையான பவுண்டரித்தொழிலை சார்ந்துள்ள வெட்கிரைண்டர் தொழில், பம்பு மற்றும் மோட்டார் தொழில், டெக்ஸ்டைல் தொழில் மற்றும் பிற பொறியியல் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பவுண்டரித் தொழிலின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை புரிந்துகொண்டுள்ளனர். பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்கள் விலை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் இந்த கட்டுக்கடங்காத விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களுக்காக, இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சிவசண்முக குமார் கூறினார்.