பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் அழைப்பு!

கோவை: பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக் கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை: பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக் கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், பருவநிலை மாறுதலை தாக்குப்பிடிக்கக் கூடிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

வறட்சி, வெள்ளம், வெப்பம், உப்புத்தன்மை, பூச்சிகள், நோய்களைத் தாங்கும் வகையில் அவை இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ளும் பயிர்களை உருவாக்கினால் தான், இந்திய வேளாண்மையின் தாக்குபிடிக்கும் திறன் அதிகரித்து, நீடித்த வளர்ச்சி பெறுவதாக இருக்கும் என்றார். 

வேளாண்மை மற்றும் உணவு துறையில் வரும் தசாப்தங்களில் பருவநிலை மாறுதலால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த அவர், சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சூழலைக் குறைக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நீர்நிலைகளில் மாசு அதிகரித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கவலை தெரிவித்த அவர், பருவநிலை மாற்றத்தை தாங்கக் கூடிய, வறட்சியைத் தாங்கக் கூடிய மரபணு மாற்றம் செய்த பயிர்களும், தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்களும் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

வேளாண்மைத் துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும் உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். விவசாயம் தான் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது எனவும் நமது கலாச்சாரம், நாகரிகத்தில் பிணைந்த அம்சமாக விவசாயம் இருக்கிறது என்று குறிப்பிட்டார். ``நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்கு இன்னும் விவசாயத்தை தான் சார்ந்திருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.

``விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, நாம் உற்பத்தியைப் பெருக்கவும், வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், சாகுபடி எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயர் மதிப்பு பயிர்கள் சாகுபடி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று குடியரசு துணைத் தலைவர் யோசனை தெரிவித்தார்.

அதேபோல, விவசாயிகளுக்கு லாபகரமான விலைகள் கிடைப்பதை தொடர்புடைய துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நல்ல சேமிப்பு மற்றும் பதப்படுத்தல் வசதிகள் செய்து தருதல், இடுபொருள்கள் கிடைக்கச் செய்தல், கடன் வசதி அளித்தல், சந்தைப்படுத்தலுக்கு நல்ல ஏற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் தான் இது சாத்தியம் என்றார்.

தமிழ்நாடு வேளாண்மைக் கழகத்தில் பட்டம் பெற்றுச் செல்பவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த நீடித்த பயன்தரக் கூடிய வேளாண்மை மேம்பாட்டை உருவாக்கி, விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். நாட்டின் பல மில்லியன் பேருக்கு உணவு, சத்து ஆகியவை போதிய அளவுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ``உங்களுடைய ஆராய்ச்சி சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பருவநிலை மாறுதல், ஆரோக்கிய பிரச்சினைகள் என மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் என்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...