கோவை: மூலப்பொருள்களின் விலை உயர்வால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவிஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டுமென்றுகோவை எம்.பி நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். மூலப்பொருள்களின் விலை உயர்வால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவிஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டுமென்று பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை: மூலப்பொருள்களின் விலை உயர்வால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவிஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டுமென்றுகோவை எம்.பி நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். மூலப்பொருள்களின் விலை உயர்வால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவிஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டுமென்று பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வால் தொழில் நடத்த முடியாத நிலைக்கு சிறு குறு தொழில்கள் தள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக கோவையில் வார்ப்பட தொழில் முனைவோர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து கடந்த நான்கு நாட்களாக நடத்தி வருகின்றனர்.400-க்கும் மேற்பட்ட வார்ப்பட ஆலைகள் முழுமையாக மூடப்பட்டு இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவிஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எவ்வித சலனமும் இல்லாமல் உள்ளது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. தொழில் நடத்த முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்டதால் வேறு வழியின்றி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
வார்ப்பட தொழில் சார்ந்த மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி-ஐ 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்கிற முக்கியமான கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த மூலப்பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வு வார்ப்பட தொழிலை மட்டுமல்லாமல் இதனைச் சார்ந்த அனைத்து தொழில்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நெருக்கடியை எதிர்கொண்டு வார்ப்பட தொழில்முனைவோர் விலை உயர்வை அறிவித்து பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்கு வந்தால் அது நேரடியாக நுகர்வோராகிய பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும்.
தங்கம் விலை போன்று அன்றாடம் மூலப்பொருட்களின் விலை உயர்கிறது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை 100 சதவீதம் நியாயமான கோரிக்கையாகும். மேலும் திட்டமிட்டே மூலப்பொருட்களை பதுக்கிவைத்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி செயற்கையாக விலையேற்றம் செய்யப்படுகிறதோ என்கிற இவர்களின் அச்சத்தையும் புறந்தள்ள முடியாது. ஏன் விலை ஏற்றம் என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தொழில்முனைவோர் எழுப்பும் கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைக்காக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் சிறு குறு தொழில்முனைவோரின் கோரிக்கைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் என்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு மூலப்பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக ஒரு ஆய்வுக் கமிட்டி அமைக்க வேண்டும். தொழில்முனைவோரின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 8 மாத காலம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்து வருவாய் இழந்து பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழிற்கூடங்கள் கதவடைப்பு செய்திருப்பதால் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
தற்போது வார்ப்பட தொழில் முனைவோரின் போராட்டத்தின் அடுத்தகட்டமாக சிறு குறு தொழில்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் மூடப்பட்டால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்முனைவோர் முன்வைத்திருக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.