கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மற்றும் கடந்த 12, 13-ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஆவணங்கள், முகவரிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளலூர் பகுதி 5-ஆவது வார்டு அசோக் நகர் பகுதியில் 5/20 என்ற கதவு எண் உள்ள வீட்டில் 22 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், `ஒரே கதவு எண்ணில் 22 வாக்காளர்கள் இருப்பது சாத்தியமற்றது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது தவறு ஏற்பட்டிருக்கலாம்' என்றார்.