கோவை: கோவையில் வனச்சரகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டத்து வீட்டில் 327 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவை வன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போளுவாம்பட்டி வனச்சரகர் ஆக பணியாற்றுபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி கலைவாணி, இவர் தனது இளைய மகனுடன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கிறார். இந்நிலையில் பந்தப் பாறையில் கலைவாணி பெயரில் இருக்கும் தோட்டத்து வீட்டில் 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கலைவாணி மற்றும் அவரது கணவரும், வனச்சரகருமான ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. அதிகாரி வீட்டிலேயே சந்தனக்கட்டைகள் சிக்கிய சம்பவம் வனத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அவ்வப்போது சந்தனமரக் கடத்தல் நடக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முள்ளங்காடு போராத்தியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. டிசம்பரில் மட்டும் நான்கு மரங்கள் கடத்தப்பட்டன. கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில் ஆரோக்கியசாமி தனது காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்துள்ளார். அவரது காரை வேட்டைத் தடுப்பு காவலர் ஓட்டியுள்ளார். மற்றொரு வேட்டைத் தடுப்பு காவலரும் உடன் சென்று வந்துள்ளார். இவர்களில் ஒருவர் போலி பில் மோசடியில் தொடர்புடையவர்.
வனச்சரகர் ஆரோக்கியசாமி இதற்கு முன் குற்றாலம் மற்றும் முதுமலையில் பணியாற்றியவர். எனவே, அங்கு நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆரோக்கியசாமியின் மகன் மற்றும் மகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிப்பதாக அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே, இந்த முறைகேட்டில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேற்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலக ஊழியர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது தோட்டத்தில் சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருவண்ணாமலை பந்தப் பாறையில் கோவை வன அதிகாரி ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணிக்குச் சொந்தமான தோட்டங்கள் உள்ளன. அங்கிருந்தும் சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாநில வனத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்ததும் வனஅதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக மாவட்ட வன அலுவலர் முகமது ஷபாப் தெரிவித்தார்.