மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்தவர் அடித்துக்கொலை: கணவர் கைது!

கோவை: காரமடையில் தனது மனைவியுடன் கள்ளக்காதலன் தனிமையில் இருந்ததைப் பார்த்த அவரது கணவன் அதிர்ச்சி அடைந்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: காரமடையில் தனது மனைவியுடன் கள்ளக்காதலன் தனிமையில் இருந்ததைப் பார்த்த அவரது கணவன் அதிர்ச்சி அடைந்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள அன்சூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன் (வயது 62). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இவரது மனைவி கவிதா (வயது 40). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த காளி (வயது 58) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கவிதாவும் காளியும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அத்துடன் செல்போன் மூலமாகவும் பேசி வந்தனர். தகவலறிந்த தர்மன் கவிதாவைக் கண்டித்தார். இதற்கிடையே நேற்று இரவு தர்மன் வீட்டுக்கு மது வாங்குவதற்காக காளி வந்தார். அப்போது அங்கு தர்மன் இல்லாததால் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு கவிதாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. திடீரென அங்கு வந்த தர்மன் இதைக்கண்டு ஆத்திரமடைந்தார். வீட்டின் உள்ளே இருந்த இரும்புக் கம்பியை எடுத்து காளி மற்றும் கவிதாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...