வரும் 20ம்‌ தேதி ஈஷா விவசாய இயக்கம்‌ சார்பில்‌ இயற்கை இடுபொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி!

கோவை: திருநெல்வேலி ஈஷா விவசாய இயக்கம்‌ சார்பில்‌ திருநெல்வேலியில்‌ 12 வகையான இயற்கை இடுபொருட்கள்‌ தயாரிக்கும்‌ களப்‌ பயிற்சி டிசம்பர்‌ 20ம்‌ தேதி நடைபெற உள்ளது.


கோவை: திருநெல்வேலி ஈஷா விவசாய இயக்கம்‌ சார்பில்‌ திருநெல்வேலியில்‌ 12 வகையான இயற்கை இடுபொருட்கள்‌ தயாரிக்கும்‌ களப்‌ பயிற்சி டிசம்பர்‌ 20ம்‌ தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும்‌ நோக்கத்துடன்‌ ஈஷா விவசாய இயக்கம்‌ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நம்மாழ்வார்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலில்‌ சத்குருவால்‌ தொடங்கப்பட்ட இந்த இயக்கம்‌ கடந்த 2015-ம்‌ ஆண்டு முதல்‌ தமிழகத்தின்‌ வெவ்வேறு மாவட்டங்களில்‌ இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இயற்கை இடுபொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி, நெல்‌, கரும்பு, வாமை, தென்னை என பயிர்‌ வாரியான சாகுபடி முறை பயிற்சி, பூச்சி மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்‌ தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம்‌ மானூர்‌ தாலுகா, அழகிய பாண்டிபுரம்‌ அஞ்சல்‌ செட்டிக்குறிச்சி கிராமத்தில்‌ அமைந்துள்ள வேதா இயற்கை விவசாய பண்ணையில்‌ இயற்கை இடுபொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி டிசம்பர்‌ 20-ஆம்‌ தேதி நடைபெற உள்ளது.



இந்தப்‌ பயிற்சியில்‌ ஜீவாமிர்தம்‌, கனஜீவாமிர்தம்‌, அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள்‌, செயலூக்கிகள்‌, பூச்சிவிரட்டிகள்‌ போன்றவற்றை தயாரிக்கும்‌ முறை மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை குறித்த செயல்முறை விளக்கம்‌ மற்றும்‌ களப்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகளில்‌ பங்கேற்க விரும்பும்‌ விவசாயிகள்‌ 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமனித இடைவெளி மற்றும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ பின்பற்றப்படும்‌.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...