கோவை: 9-ம் வகுப்பு மாணவி ஆன்லைன் வகுப்பு முடிந்தபிறகும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டித்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள குறிச்சி பாளையத்தை சேர்ந்த அன்புராஜ் மகள் பெல்சியா (வயது 14). இவர் சூலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை என்பதால் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார். இதற்காக அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்திருந்தனர்.
ஆன்லைன் வகுப்புகள் முடிந்தபிறகும்கூட பெல்சியா தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த பெல்சியா நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் உடனடியாக போலீசார் விரைந்து சென்று பெல்சியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.