கோவை மாநகராட்சியில், கழிவுகள் சேகரிக்க புதிய வாகனங்கள்: அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சியில் கழிவுகளை சேகரிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில் கழிவுகளை சேகரிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்காக மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் 18 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டன. அவற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.95 லட்சம் மதிப்பீட்டில் 13 மக்கும் கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களும், தூய்மை இந்தியா திட்டத்தில் 35.75 லட்சம் மதிப்பீட்டில் 5 மக்காத கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களும் வாங்கப்பட்டன. 

இந்த வாகனங்களை குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பயன்பாட்டுக்கு அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்‌. மேலும் சாலையோர கட்டிடக் கழிவுகளை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக கனரக வாகனத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...