வேளாண் சட்ட நன்மைகள் குறித்து கோவையில் பா.ஜ.க டிராக்டர் ஊர்வலம்: வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்!

கோவை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவையில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பா.ஜ.க அகில இந்திய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவையில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பா.ஜ.க அகில இந்திய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



ம த்திய அரசு சமீபத்தில் மூன்று வேளாண் சட்டத்தை அமல்படுத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெ ரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவ சாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வரும் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து விளக்க பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரச்சாரம் இன்று தொடங்கியது.



பேரூரில் துவங்கிய இந்த பிரச்சார ஊர்வலத்தை பா.ஜ.க அகில இந்திய மகளிர் அணித் தலைவர் வா னதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு இந்த மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என்ற பெயரில் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையுடன் எதிர்க்கட்சிகள் விளையாடுகின்றன. தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக உதவி செய்வோம், விளைபொருளுக்கான சந்தையை உருவாக்குவோம் என தேர்தல் அறிக்கையில் கூறிய காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை.



தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை பிரதமர் மோடி சட்டமாக்கி விவசாயிகளுக்கு உதவி செய்யும்போது அதை அரசியலாக்கி வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. எதிர்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்க்கின்றனர். திடீரென பச்சை துண்டை போட்டு கொண்டு வந்து தானும் விவசாயி என்றால் அதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள். கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் விவசாயத்துறை அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.



இவ்வாறு கூறிய அவரிடம் அம்பானி, அதானி குழுமங்கள் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைத்து வருவது குறித்து நிருபர்கள் கேட்டபோது, தொண்டாமுத்தூர் பகுதியில் திராட்சை மற்றும் சின்ன வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்பட்டு வந்தநிலையில் குளிர்பதனக் கிடங்குகள் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதுபோன்ற குளிர்பதனக் கிடங்குகளை அம்பானி, அதானி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அமைக்கலாம் என்றார். முன்னதாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களில் பொய்யும் உண்மையும் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...