தென்னை நார்ப் பொருட்கள் மதிப்புகூட்டி ஏற்றுமதி செய்ய கடனுதவி: அரசுக்கு கோரிக்கை!

பொள்ளாச்சி: தென்னை நார்ப் பொருட்களை மதிப்புகூட்டி ஏற்றுமதி செய்ய கடனுதவி வழ ங்க வேண்டுமென்று அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி: தென்னை நார்ப் பொருட்களை மதிப்புகூட்டி ஏற்றுமதி செய்ய கடனுதவி வழ ங்க வேண்டுமென்று அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தென்னை நகரம் என்றழைக்கப்படும் பொள்ளாச்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னை நார்ப் பொருட்கள் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்து ஆண்டுக்கு அதிகளவில் அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது.



பெரும்பாலான தென்னை நார்ப் பொருட்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அங்கு தென்னை நாரைக் கொண்டு தரை விரிப்பான், மாடி வீட்டுத் தோட்டங்களுக்குத் தேவையான பூந்தொட்டிகள் மற்றும் பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் என மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்கின்றனர். இதன்மூலம் சீன நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலேயே தென்னை நாரில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இந்த பொருட்களைச் சந்தைப்படுத்தி அதிக வருவாய் ஈட்டலாம் என தென்னைநார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



புதிய முயற்சியாக பொள்ளாச்சி பகுதியில் 5 லட்சம் முதலீட்டில் சிறிய அளவிலான அழகு சாதனப் பூந்தொட்டிகளை தயாரிக்கும் பணியில் தென்னைநார் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .பெரும்பாலும் பூந்தொட்டிகள் பிளாஸ்டிக் பொருட்களில் தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது.தென்னை நார் மூலம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்கள் மண்ணில் மக்கும் தன்மை உள்ளதால் மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.



இந்தியாவிலிருந்து 7 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆறு லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு இருப்பதால் உற்பத்தியை அதிகப்படுத்த 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதுடன் கூடுதல் மானியம் வழங்கினால் சீனாவைவிட உலகளவில் ஏற்றுமதியை அதிகரிக்கலாம். எனவே மத்திய அரசு உற்பத்தியாளர்களுக்குத் தேவையான வங்கிக் கடன் வசதியை செய்து தர வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...