கோவை: கோவையில் அதிகரிக்கும் நகை பறிப்பு, பிக்பாக்கெட் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. வீதிக்கு ஒரு கேமரா வைத்தும்கூட திருடர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை நகரில் நகை பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எனவே, வீதிக்கு ஒரு கேமரா கட்டாயம் என்ற திட்டத்தைச் செயலாக்க நகர போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வணிகப் பகுதியில் குறிப்பாக ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, தியாகி குமரன் வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பரவலாக அமைக்கப்பட்டிருக்கிறது. 90 சதவீத கடைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அடுக்கு மாடிகளை போலீசார் கணக்கெடுத்து அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும்போது பொதுமக்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிடுகிறார்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருடர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டுகிறார்கள். 90 சதவீத திருட்டுகள் வீடுகளில் ஆளில்லாத நேரத்தில் நடப்பதாகவும் 70 சதவீதம் இரவு நேரங்களில் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நகரில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பார்ட்மெண்ட் அமைந்துள்ளது. அனைத்து அப்பார்ட்மெண்ட்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்தந்த பகுதி காவல்நிலையங்கள் மூலம் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மூலமாகவும் அப்பார்ட்மெண்ட் கேமராக்களின் பதிவுகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
விடுமுறையில் வெளியூர் செல்பவர்கள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பூட்டிய வீடுகளைக் கண்காணிக்க ரோந்து போலீசாருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் தங்கள்து வீடுகள் பூட்டப்பட்ட விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இரவு நேரங்களில் நடக்கும் திருட்டுகளைத் தடுப்பதில் சிக்கல் இருக்கிறது.
பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா உள்ள இடங்களில்கூட நகை பறிப்பு திருடர்கள் சுற்றுகிறார்கள். நகை பறிப்பு கும்பல் போலி வாகனப் பதிவு எண் உள்ள வாகனங்களில் வலம் வருகின்றனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. இதனால் கேமராவை வைத்தும் திருடர்களைப் பிடிப்பது சவாலாகி விட்டது என குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகைத் திருடர்கள் அதிகவேகத்தில் இயங்கும் பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும், இதுபோன்ற பைக்குகளை நன்றாக ஓட்டத் தெரிந்தவரை வைத்துக்கொண்டு பைக்கை நிறுத்தி தயாராக வைத்து விட்டு மற்றொருவர் திருட்டில் ஈடுபது தெரிய வந்துள்ளது. செயின் பறிப்பில் புதிய திருடர்கள் அதிகமாக களமிறங்கியுள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
வீதிக்கு ஒரு கேமரா திட்டம் செயல்படுத்தப்பட்டாலும்கூட பிக்பாக்கெட், வழிப்பறி, நகைப் பறிப்பு திருடர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. எனவே, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நகை அணிந்து வெளியே செல்ல அச்சத்துடன் காணப்படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.