கோவையில், பெண்களைக் குறி வைத்து நகை பறிக்கும் சம்பவம் அதிகரிப்பு: வெளியே நடமாட பெண்கள் அச்சம்!

கோவை: கோவை மாநகரப் பகுதியில் கடந்த சில நாட்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் நகைகளை அணிந்து வெளியே செல்ல அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரப் பகுதியில் கடந்த சில நாட்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் நகைகளை அணிந்து வெளியே செல்ல அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9 -வது வீதியைச் சேர்ந்தவர் சிவகாமி (வயது 45). இவர் தனது வீட்டு முற்றத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சிவகாமியின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், `திருடன்... திருடன்...' என சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் செயினை பறித்து தப்பி ஓடியவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. குடும்பக் கஷ்டம் காரணமாக செயின் பறித்ததாக அவர் கூறினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் ஐயா சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி புஷ்பா (வயது 60). இவர் இரவு 10 மணி அளவில் உணவு சாப்பிட்டபிறகு நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புஷ்பா பெரியகடைவீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

கோவை பகுதியில் தொடர்ந்து பெண்களைக் குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதால் பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். நகை பறிப்பு சம்பவங்களின்போது கழுத்தில் காயங்கள், கீழே விழுதல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் செயின் பறிப்பு திருடர்களை கூண்டோடு பிடித்து முழுமையாக தண்டிக்க வேண்டும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெண்கள் தனியாக வெளியில் துணிச்சலோடு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...