கோவை: கோவையில் அழுகிய நிலையில் கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சூலூர், பீடம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (65), கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி பாப்பாத்தி (60), இவர்களது மகள் கர்ப்பமாக உள்ளார். அவரை பார்த்துக் கொள்வதற்காக பாப்பாத்தி புலியகுளம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்முகம் புளியங்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால், அவர் பணம் தர மறுத்தார். இதனால் சண்முகம் கோபித்துக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றார்.
இந்த நிலையில், நேற்று பாப்பாத்தியின் வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரி என்பவர் அவருக்கு போன் செய்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறினார். உடனே பாப்பாத்தி சண்முகத்திற்கு போன் செய்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்து உடனே வீடு திரும்பிய பாப்பாத்தி வீட்டினுள் சென்று பார்த்த போது, சண்முகம் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சூலூர் போலீசார் 174 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.