குன்னூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மூலம் இணையதள சேவை தொடக்கம்!

நீலகிரி: தமிழக அரசுக்கு சொந்தமாக குன்னூரில் செயல்பட்டு வரும் இன்கோசர்வ் நிறுவனத்தில் இ-காமர்ஸ் இணையதள சேவை இன்று துவங்கப்பட்டது.


நீலகிரி: தமிழக அரசுக்கு சொந்தமாக குன்னூரில் செயல்பட்டு வரும் இன்கோசர்வ் நிறுவனத்தில் இ-காமர்ஸ் இணையதள சேவை இன்று துவங்கப்பட்டது.

இந்தியாவில் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு அமைப்பான இண்ட்கோசர்வ் (கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை) நிறுவனம் கடந்த 55 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 30,000 சிறு குறு தேயிலை விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இண்ட்கோசர்வின் 16 தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் முதற்கட்டமாக 5 தொழிற்சாலைகளை நவீன மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேயிலைத்தூள் ரகங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்குவதற்காக இ-காமர்ஸ் என்னும் இணையதள சேவையை தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் ஒரு ஆண்டிற்கு 13 மில்லியன் தேயிலைத்தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அரசு சார்பில் துவக்கப்பட்ட தேனீர் விற்பனையகத்தில் அனைத்து விதமான தேயிலை ரக தேனீர்களும் கிடைக்கும் எனவும் சந்தைப்படுத்துவதில் முக்கியத்துவம் தரப்பட்டு வருவதாகவும், நீலகிரி தேயிலைக்கென்று தனித்தன்மை சான்று பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இறுதியாக இந்த நிகழ்ச்சியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக இண்ட்கோசர்வ் நிறுவனம் சார்பில் 25 போக்குவரத்து தடுப்புகள் (பேரிகார்டு) காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...