திருப்பூர் அருகே துணிகளை காயப்போட முயன்ற போது கிணற்றில் தவறி விழுந்த பெண்; தீயணைப்புத் துறையினர் மூலம் பத்திரமாக மீட்பு!

திருப்பூர்: திருப்பூர் தில்லை நகர் பகுதியில் துணிகளை காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் தில்லை நகர் பகுதியில் துணிகளை காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர் தில்லை நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (53). இவர்கள் வசிக்கும் வீடு உள்ள குடியிருப்பில் 50 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில், இன்று அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, வீட்டிலிருந்த துணிகளை துவைத்த முத்துலட்சுமி, துணிகளை கிணற்றின் அருகே காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்தார்.



அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிற்றின் மூலமாக கிணற்றுக்குள் இறங்கி, நீரில் தத்தளித்த பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து மீட்கப்பட்ட பெண் முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...