வால்பாறை மானாம்பள்ளியில் உயிருக்குப் போராடிய ஆண் காட்டுயானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகப் பகுதியில் உயிருக்குப் போராடிய ஆண் காட்டுயானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை: வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகப் பகுதியில் உயிருக்குப் போராடிய ஆண் காட்டுயானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்நிலையில் வால்பாறை அருகே  உள்ள பெரியகல்லாறு எஸ்டேட்  வனப்பகுதிக்குள் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் அறிவுறுத்தலுக்கிணங்க வேட்டைத் தடுப்பு காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று காலில் அடிபட்டு நடக்க முடியாமல் உணவின்றி தவித்துக் கொண்டிருந்தது. 

இதைப்பார்த்த வேட்டைத் தடுப்பு காவலர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளித்தனர். உடனே ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுரையின்படி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவர்களை அழைத்துச் சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய காட்டுயானைக்கு கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த காட்டு யானை இன்று உயிரிழந்தது. இதையடுத்து உயிரிழந்த யானையை அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. இதுகுறித்து, மருத்துவர் ஒருவர் கூறும்போது உயரமான மலைமேலிருந்து கீழே இறங்கும்போது யானையின் இரண்டு பின் கால்களும் எதிர்பாராதவிதமாக உடைந்து பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் தண்ணீர் மற்றும் உணவின்றி உடல் நலம் பாதிக்கப்பட்டு யானை இறந்ததாக தெரிவித்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...