சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

பொள்ளாச்சி: 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி: 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் மகன் தினேஷ் (19). தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்த தினேஷுக்கும் 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் பொள்ளாச்சி தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், கோபாலபுரம் அருகே பதுங்கியிருந்த தினேஷை கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...