ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சினை தீர்க்கக் கோரி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்!

பொள்ளாச்சி: பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடைபெற்றது.

பொள்ளாச்சி: பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடைபெற்றது.



பி.எஸ்.என்.எல் நிறுவன ஒப்பந்த ஊழியர்களின் சம்பள கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்படுவதைக் கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் ஆர்.பிரபாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் உடுமலை கிளைச் செயலாளர் எஸ்.சிக்கந்தர்பாட்சா பேசினார். 

போராட்டத்தின்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் குறித்து கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதைக் கண்டித்தும், சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உள்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...