பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் தமிழக கவர்னர் சுவாமி தரிசனம்!

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக கவர்னர் பிரசித்திபெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிவில் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக கவர்னர் பிரசித்திபெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிவில் சுவாமி தரிசனம் செய்தார்.



கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் 41-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை பிரசித்திபெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். 



இதையடுத்து சுவாமி தரிசனம் செய்த கவர்னர் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து வழிபாடு செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பசுவுக்கு தீவனம் வழங்கிய அவர் கோவில் யானையான கல்யாணியிடம் ஆசி பெற்றார். ஆளுநரின் பேரூர் வருகை காரணமாக சிறுவாணி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...