கோவை: குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்வது சமூகத்துக்கு நல்லதல்ல. இது சமூகத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சமிக்கா ரவி, “இந்தியாவில் விவசாயிகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்காக யார் குரல் கொடுக்கப்போகிறார்கள்?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தப் பதிவை ரீட்விட் செய்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ், “ஒரு பெண் குடும்ப அமைப்பின் அச்சாணியாகத் திகழ்கிறாள். எனவே, வீட்டுத்தலைவிகள் தற்கொலை செய்வது சமூகத்துக்கு நல்லதல்ல; இது சமூகத்தின் அடிக்கற்களையே அசைத்துவிடும். நம் உள்நலன் நமக்கு தலையாயதாக மாறவேண்டும். நம்மைச் சுற்றியுள்ளோர் நலனை உறுதிசெய்ய இது அத்தியாவசியமானது” என்று கூறியுள்ளார்.