கோவை: பெண் போலீஸைத் தாக்கிய அவரது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கள்ளக்காதலி தலைமறைவாக இருந்தார். இன்று அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் உமா(47). இவர் போத்தனூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரும் ஆனந்தன் என்பவரும் கடந்த 2007ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சரிவர வேலைக்குச் செல்லாத ஆனந்தன் அவ்வப்போது உமாவை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் உமா பெயரில் சென்னையில் உள்ள வீட்டை விற்றுவிட்டு கோவையில் வீடு வாங்க வேண்டும் என கூறி வந்ததுடன் இதுதொடர்பாக அடிக்கடி உமாவிடம் சண்டை போட்டு வந்தாராம். இதற்கிடையே சித்ரா என்ற பெண்ணுடன் ஆனந்தன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு காங்கயம்பாளையம் பகுதியில் வீடு எடுத்து வசிக்கத் தொடங்கினார். இதுகுறித்து உமா அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று உமா வீட்டுக்கு கள்ளக்காதலியுடன் வந்த ஆனந்தன் தனது பைக்கை எடுத்துச் செல்ல சாவியைக் கேட்டார். இதற்கு உமா மற்றும் அவரது தாயார் மறுக்கவே அவர்களை ஆபாச வார்த்தைகளால் ஆனந்தன் திட்டினார். அப்போது உமாவையும், அவரது தாயாரையும் ஆனந்தன் மற்றும் அவரது கள்ளக்காதலி சித்ரா ஆகியோர் தாக்கினார். மேலும் உமாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சுவற்றில் மோதி காயத்தை ஏற்படுத்தினர். இதில் உமா கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் போலீசார் ஆனந்தனிடம் விசாரணை நடத்தினர். உமா அளித்த புகாரின் பேரில் ஆனந்தனை கைது செய்து கோவை மத்திய சிறைக்கு அனுப்பினர். தலைமறைவான சித்ராவை கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே இன்று போலீசார் கைது செய்தனர். கோவையில் பெண் போலீஸை கள்ளக் காதலியுடன் சேர்ந்து அவரது கணவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.