கோவை: கோவையில் விபத்தில் காயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கால் வலியால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: கோவையில் விபத்தில் காயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கால் வலியால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் பற்றிய விவரம் வருமாறு:
கோவை சத்தி சாலையில் உள்ள கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அந்த வாலிபர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 80). இவர் கடந்த 10 ஆண்டுகளாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமி சாணிப் பவுடரைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.