கோவை: கோவையில் 20 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொண்ட பெண் போலீசார் ஒருவரையொருவர் கட்டித்தழுவி கண்ணீர் மல்க அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

கோவையில் 20 வருடங்களுக்கு முன்பு தமிழக போலீசுக்குத் தேர்வாகி பயிற்சி பெற்று வெவ்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பணிபுரிந்து வந்த பெண் போலீசார் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் கண்ணீர் மல்க கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடைபெற்றது.
தமிழக பெண் போலீசாருக்கான தேர்வு கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 272 பேர் வேலூர் பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்பட்டு பெண் போலீஸ் பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். அங்கு ஒரு வருட காலப் பயிற்சியின்போது அனைவரும் தங்களுடைய நட்பை, பாசத்தை வெளிப்படுத்தி ஒற்றுமையாக இருந்தனர். பயிற்சி முடிந்ததும் பல்வேறு இடங்களுக்கு காவலர் பணிக்காக பணியமர்த்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கடலூர், விழுப்புரம், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை, மதுரை, சென்னை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளாக அனைவரும் தொலைபேசி, செல்போன், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பில் இருந்தனர். இந்நிலையில் கோவையில் பணியில் இருந்த அனைவரும் மீண்டும் ஒருமுறை சந்தித்து ஒன்றாக மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆசைப்பட்டனர். அதற்கான ஏற்பாட்டை கோவையில் உள்ள பெண் போலீசார் ஏற்பாடு செய்தனர்.
பெண் போலீசார் ஒன்றுகூடி சந்திக்கும் அந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக செல்வபுரம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான `மித்ரா ரிசார்ட்' ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2000-ஆவது ஆண்டு பணியில் சேர்ந்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வருகை தந்த 140 பேரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ருசிகரமான சம்பவங்கள், பணியில் நடந்த சம்பவங்கள், குடும்பங்கள் பற்றி பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஒருவரையொருவர் கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். மேலும், இந்நிகழ்ச்சியில் ருசிகரமான விளையாட்டுகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்ட 140 பெண் போலீசாரும் ஒரே நிறத்தில் சேலை அணிந்து ஒன்றாக அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 4 பேர் இன்ஸ்பெக்டர்களாகவும், 3 பேர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அப்போது அனைவரும் கட்டித்தழுவி கண்ணீர் மல்க விடை பெற்றது காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இனி ஆண்டுதோறும் இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தவேண்டுமென முடிவு செய்தனர்.