கோவை: வால்பாறையில் காயம்பட்டு நடக்கமுடியாத நிலையில் இருந்த ஆண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம், மானம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லார் பிரிவில் சுமார் இரண்டு முதல் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று உடல் நலக்குறைவால் நடக்க இயலாத நிலையில் உள்ளதாக நேற்று மதியம் தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து உடனடியாக அந்தப் பிரிவின் வனவர் தலைமையில் தனி குழு அமைத்து அந்தக் காட்டுயானையின் நிலைகுறித்து கண்காணிக்கப்பட்டது.
காட்டு யானையின் இரண்டு பின்னங்கால்களிலும் அடிபட்டு நடக்க இயலாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுரையின்பேரில் வால்பாறை உதவி கால்நடை மருத்துவர் மூலம் உடனடி சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடத்தில் தற்காலிக மேற்கூரை அமைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அந்த காட்டு யானை எழுந்து சுமார் 20 மீட்டர் தூரம் நடந்து சென்று சரிந்து விழுந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி யானை இறந்தது. இந்தக் காட்டு யானையின் உடலை பரிசோதனை செய்ய துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் செல்வம் தலைமையில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வால்பாறை இயற்கை வன ஆர்வலர் ஆனந்த், பிரிவு வனவர் ஷேக் உமர் முன்னிலையில் வால்பாறை உதவி கால்நடை மருத்துவர் மெய்யரசன் உடற்கூறு பரிசோதனை செய்தார். இச்சம்பவம் வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.