கள்ளக்காதலியுடன் சேர்ந்து பெண் போலீஸை அடித்து உதைத்து கொடுமை: கணவர் கைது!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெட்ரோல் பங்கில் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கள்ளக்காதலியுடன் சேர்ந்து பெண் போலீஸை அடித்து உதைத்து கொடுமை செய்தது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி உமா (வயது 47). இவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் டிரைவராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவரும் கடந்த 2007ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் எனது கணவர் ஆனந்தன் சென்னையில் எனது பெயரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு கோவையில் வீடு வாங்க வேண்டுமென்று என்னைத் துன்புறுத்தினார். இதனால் எங்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எனது கணவருக்கு காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மேலும் அவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் அந்தப் பெண்ணுடன் சுற்றி திரிந்தார். இதை தட்டிக்கேட்ட என்னை தாக்கிவிட்டு அந்தப் பெண்ணுடன் காங்கேயம்பாளையம் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் நான் வீட்டில் இருந்தபோது கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த எனது கணவர் மோட்டார் சைக்கிள் சாவியைத் தருமாறு கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால் அவரும் அந்தப் பெண்ணும் சேர்ந்து எனது குழந்தைகள் முன்னிலையில் என்னைத் தாக்கி, தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அவர்கள் இரண்டுபேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். புகாரின்பேரில் பெண் போலீஸ் உமாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய அவரது கணவர் ஆனந்தன் மற்றும் ஆனந்தனின் கள்ளக்காதலி சித்ரா மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...