கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெட்ரோல் பங்கில் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி கக்கொத்தி பாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (47). இவர் பொள்ளாச்சி மார்க்கெட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், உதயகுமார் பெட்ரோல் நிறுவனத்திற்கு லோடுக்கான பணத்தை தாமதமாக செலுத்தி வந்ததாக தெரிகிறது. அதனால் பெட்ரோல் நிறுவனம் பங்குக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோலை நிறுத்தியுள்ளது. இதனால் உதயகுமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு விரக்தியடைந்த அவர், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 174 சட்டப்பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.