கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட நிர்வாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கான சர்வர் வேகம் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக சோதனை முறையில் தாலுக்கா வாரியாக ஒரு சில கடைகளில் இந்த திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. சோதனை முறை வெற்றியடைந்ததை அடுத்து இந்த திட்டம் மீண்டும் மாவட்டத்தில் உள்ள 1,420 ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த திட்டத்தின் படி ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக ரேஷன் கடைக்கு வர வேண்டும். அவர்களின் விரல் ரேகையை பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதன்மூலம் ஒருவரின் ரேஷன்கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பொருட்கள் வாங்குவது தடுக்கப்படுகிறது. தற்போது சர்வர் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் 3 நிமிடத்தில் பொருட்களை வாங்க முடியும்,’’ என்று தெரிவித்தனர்.