25 கிலோ தங்கக் கட்டிகளுடன் நகை மொத்த விற்பனையாளர் மாயம்? போலீஸ் விசாரணை!

கோவை: 25 கிலோ தங்கக் கட்டிகளுடன் நகைப் பட்டறை உரிமையாளர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: 25 கிலோ தங்கக் கட்டிகளுடன் நகைப் மொத்தவிற்பனை உரிமையாளர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் தங்கக் கட்டிகளை ஆர்டரின்பேரில் எடுத்து நகை வடிவமைத்துக் கொடுக்கும் பட்டறைகளுடன் தொழில் செய்யும் மொத்த விற்பனையாளர் ஒருவர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை செல்வபுரம் அசோக் நகரைச் சேர்ந்த தங்க நகைப் பட்டறை உரிமையாளர் ஒருவர் நகரில் பல்வேறு நகைக்கடைகளில் தங்கக் கட்டிகளை ஆர்டரின் பேரில் வாங்கி ப்ங்கட்டறைகளுடன் வேலை செய்து  நகைகளாக வடிவமைத்துக் கொடுத்து வந்தார். 

இவர் நகரில் 15-க்கும் மேற்பட்ட நகைக்கடை நிர்வாகத்தினரிடம் இருந்து 25 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளை வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தங்கக் கட்டிகளுடன் அவர் மாயமாகிவிட்டார். அவர் இதுவரை தங்கக் கட்டிகளையும் தரவில்லை. ஆபரணமாக வடிவமைத்தும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அவர் மொத்த தங்க நகைகளையும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்வபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதிக எடை கொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் ஒரு நபரிடம் மொத்தமாக ஒப்படைத்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மாயமான தங்க நகை விற்கும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், இந்த புகார் தொடர்பாக போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

கடந்த ஆண்டில் கோவை நகரில் இதேபோல பல லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கக் கட்டிகளுடன் ஒருவர் மாயமானார். போலீசார் விசாரித்து வந்த நிலையில் தங்கக் கட்டியை கடத்தியதாக கூறப்பட்ட நபர் சிக்கினார். இதைத்தொடர்ந்து புகார் அளித்தவர்கள் தங்களது புகாரை வாபஸ் பெற்றனர். வழக்குபதிவு செய்யாமலே கடத்தல் புகார் முடிவுக்கு வந்தது. தற்போதும் இதேபோல் புகார் வந்திருக்கிறது.

தங்கக்கட்டி நகை தயாரிப்பு தொழில் என்பது நம்பிக்கை அடிப்படையில் நடக்கக்கூடியது. முறையான ஆதாரம் மற்றும் ஆவணங்களுடன் தங்கக்கட்டிகள் நகைகள் கையாளப்படுவதில்லை. வருமான வரி விவகாரம் காரணமாக ஆவணங்களை பலரும் பின்பற்றுவதில்லை எனத் தெரிகிறது. நம்பிக்கை மோசடியாக ஒருவர் தங்கக்கட்டிகள் கடத்திச் சென்றால். அவரைப் பிடித்து தங்கத்தை மீட்க போலீசார் அவரை அணுகுவது வாடிக்கையாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் தங்கக் கட்டியை கடத்திச் சென்ற வடமாநில வாலிபரைப் பிடிக்க தங்கநகை உரிமையாளர்கள் கோவை போலீசை அணுகினர். போலீசாரை விமானத்தில் அனுப்பி வைத்து கடத்திச் சென்றவரை ஒரே நாளில் மடக்கிப்பிடித்தனர். தற்போது வந்துள்ள தங்கக்கட்டி கடத்தல் புகார் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `புகார் உண்மையானதா என விசாரிக்கிறோம். சரியாக இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...