கோவை அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை மூட்டை பறிமுதல்: 2 பேர் கைது

கோவை: கோவை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றிவந்த மாருதி காரில் 300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலையை கடத்தி வந்த இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.

கோவை: கோவை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றிவந்த மாருதி காரில் 300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலையை கடத்தி வந்த இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.

கோவை கருமத்தம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜ் தலைமையிலான போலீஸ் குழு நேற்று கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் டி.என்.எஸ்.டி..சி டிப்போ அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் மூன்று பேர் இருந்தனர். போலீசைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. அவன் தற்சமயம் சோமனூர் கருமத்தம்பட்டி பகுதியில் வசித்து வருகிறான். தர்வேஷ் (வயது 35) என்பவன் மேட்டுப்பாளையம் டவர் ஆபீஸ் ரோட்டில் வசித்து வருகிறான். தப்பி ஓடியவனின் பெயர் மோதிலால் என்பது தெரியவந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் 300 கிலோ 10 மூட்டைகளில்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 3 லட்ச ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்டவர்களிடம் தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தக் கும்பல் பொருட்களை மொத்த குடோனில் இருந்து எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...