வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சிபெற்ற 60 வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி!

குன்னூர்: வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சிபெற்ற 60 இளம் ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

குன்னூர்: வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சிபெற்ற 60 இளம் ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இன்று சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட 60 இளம் ராணுவ வீரர்களை நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பும் நிகழ்ச்சி துணை கமாண்டன்ட் பி.என். நாயக் தலைமையில் நடை பெற்றது.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். இந்நிலையில் வெலிங்டன் ராணுவ முகாமில் 46வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 60 பேர், ராணுவ வீரர்களாகப் பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பயிற்சி முடித்துச் செல்லும் ராணுவ வீரர்கள் உப்பை உட்கொண்டு பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசியக் கொடி மீது கைவைத்தபடி சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை கமாண்டன்ட் பி.என்.நாயக் பேசும்போது, `இளம் ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த தரமான பயிற்சி பெற்றிருப்பதைப் பாராட்டினார். அத்துடன் இந்திய ராணுவ வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் முயற்சியையும் பாராட்டினார். கொரோனா தொற்று பரவும் சூழலில் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் கொரோனா காரணமாக இந்நிகழ்சியில் கலந்து கொள்ள முடியாத ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் உயர்ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...