கோவையில், கொரோனா நோய்த் தொற்று குறைந்தது; டெங்கு, பன்றிக்காய்ச்சலும் குறைவே!

கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதாக கூறிய அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் நடப்பாண்டில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் குறைந்திருப்பதாக கூறியுள்ளார்.


கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதாக கூறிய அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் நடப்பாண்டில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் குறைந்திருப்பதாக கூறியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நோயாளிகளுக்கு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் இதற்காக 555 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளது. மருத்துவமனையில் 80% படுக்கைகள் காலியாக இருக்கிறது. மாநகராட்சி பகுதியில் எடுக்கப்படும் மாதிரிகளில் 400 பேரில் நால்வருக்கு மட்டுமே தொட்டு உறுதியாகிறது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், `கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினமும் 12 முதல் 15 பேர் மட்டுமே உள்நோயாளியாக சேர்க்கப்படுகின்றனர். கொரோனாவால் தற்போது 102 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிப்பு குறைந்தபோதும் படுக்கை எண்ணிக்கையை குறைக்கவில்லை. வரும் ஜனவரி 15-ந்தேதி வரை தற்போதுள்ள 555 படுக்கைகள் இருக்கும். முந்தைய ஆண்டுகளைவிட நடப்பாண்டில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது' என்றார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...