பொள்ளாச்சி: கெடிமேடு பகுதியில் கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் பலியானார்கள்.

பொள்ளாச்சியை அடுத்த கெடிமேடு பகுதியில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள். படுகாயமடைந்த ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சேகவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வய்து 34). இவரது நண்பர்கள் நாட்டுக்கல்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார்(வயது 40), பொள்ளாச்சி என்.ஜி காலனியைச் சேர்ந்த முருகானந்தம். இவர்கள் மூன்று பேரும் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் மூன்று பேரும் கார் வாங்குவதற்காக பொள்ளாச்சியில் இருந்து உடுமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை அண்ணாமலை ஓட்டிச் சென்றார். கெடிமேடு அருகே சென்றபோது மதுரையிலிருந்து எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேராக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அண்ணாமலை சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த விஜயகுமார், முருகானந்தத்தை பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த முருகானந்தம் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.