கோவையில் பெண்களிடம் நகை பறிப்பு: திருடர்களுடன் போராடி பாதி நகையை மீட்ட பெண்!

கோவை: இரவுநேரத்தில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் கோவையில் அதிகரித்துள்ளது. நகைபறிப்பின்போது திருடர்களுடன் போராடிய பெண் சிறிதளவு நகையை மட்டும் மீட்டார்.

கோவை: இரவுநேரத்தில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் கோவையில் அதிகரித்துள்ளது. நகைபறிப்பின்போது திருடர்களுடன் போராடிய பெண் சிறிதளவு நகையை மட்டும் மீட்டார்.

கோவையில் இரவு நேரங்களில் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை பறித்துச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. நேற்று இருவேறு இடங்களில் நடந்த சம்பவங்களின்போது ஒரு இடத்தில் பெண்ணொருவர் திருடர்களுடன் போராடி சிறிதளவு நகையை மீட்டார்.

கோவையில் நேற்று இரவு இரு வேறு சம்பவங்களின்போது இரண்டு பெண்களிடம் 10 பவுன் தங்கச் செயினை பறித்துச்சென்ற திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கோவை கெம்பட்டி காலனி ஐயா சாமி கோவில் வீதி பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மனைவி புஷ்பா (வயது 58), இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சாப்பிட்ட பிறகு வீட்டுவாசலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பாச்சி மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்தபடி வந்த இருவர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த நான்கே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். 

இதையடுத்து புஷ்பா சத்தம்போட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் திருடர்கள் அதற்குள் மாயமாய் மறைந்துவிட்டனர். இதுகுறித்து பெரியகடைவீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்தத் தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

இதேபோன்று கோவை சுந்தராபுரம், சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி ராஜசெல்வி (வயது 50). நேற்று இரவு இவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜர் நகர் ஜங்ஷன் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபேர் ராஜசெல்வி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர். 

இதனால் திடுக்கிட்ட ராஜசெல்வி செயினை பறிக்கவிடாமல் இறுகப் பற்றிக்கொண்டார். அப்போது அவர்களிடையே கடுமையான போராட்டம் ஏற்பட்டது. நகையைக் காப்பாற்ற அவர் போராடியதில் இரண்டு பவுன் நகை அவரது கையில் சிக்கியது. மீதி 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அந்த ஆசாமிகள் மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர். 

நேற்று இரவு நடந்த இரண்டு சம்பவங்களும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...