நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி? ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்..!

டெல்லி: நடிகர் ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சிக்கு, ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு ‛ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


டெல்லி: நடிகர் ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சிக்கு, ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு ‛ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை வரும் டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் வெளியிடவுள்ளார். தற்போது 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், கட்சி அறிவிப்புப் பணிகளுக்காக டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

மேலும், தான் தொடங்கவுள்ள புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்துள்ளார். அவர்கள் இருவருமே கட்சிப் பணிகளை மும்முரமாகக் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் நேற்று (டிசம்பர் 14) தமிழகத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

'அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்' என்ற பெயரை சில மாதங்களுக்கு முன்பு தான் 'மக்கள் சேவை கட்சி' என மாற்றியுள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு படத்தில், 'மக்கள் சக்தி கழகம்' என்ற பெயரில் சில அரசியல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனாலேயே இந்தப் பெயரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கையில் 'பாபா முத்திரை' சின்னமிருந்தால் ஒதுக்குமாறும், அது இல்லை என்றால் ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில் ரஜினிகாந்த் பெயர் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான சின்னங்கள் ஒதுக்கீடு பட்டியலில் 'மக்கள் சேவை கட்சி'க்காக ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், தற்போது 'மக்கள் சேவை கட்சி', ஆட்டோ சின்னம் என்ற தகவல் எல்லாம் வெளியான போதிலும், ரஜினி தரப்போ அமைதி காத்து வருகிறது. வரும் டிசம்பர் 31-ம் தேதி இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...