நிச்சயித்த காதலி பேச மறுத்ததால் டிரைவர் தற்கொலை!

கோவை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி பேச மறுத்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி பேச மறுத்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலித்த உறவினர் பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட நிலையில், போதிய வருமானம் இல்லை எனக்கூறி பெண்ணின் பெற்றோர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். அத்துடன் அந்தப் பெண் பேச மறுத்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த டிரைவர் மாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 24). இவர் கோவை வடவள்ளி, லட்சுமிநகர் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கண்ணன் அவரது உறவினர் பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். எனவே இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறிய அவர் அந்தப்பெண்ணை திருமணம் முடிக்க நிச்சயம் செய்தார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கண்ணன் தான் காதலித்த பெண்ணை கரம் பிடிக்கப்போகும் கனவில் மிதந்து இருந்துவந்தார். மகிழ்ச்சியில் திளைத்த அவர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால், அந்தப் பெண்ணின் பெற்றோர் கண்ணனுக்கு போதிய வருமானம் இல்லை என்றுகூறி திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தனர். இதனால் கண்ணனுக்கும் அந்தப் பெண்ணுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து அந்தப் பெண் கண்ணனிடம் பேசாமல் இருந்து வந்தார். எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பேசாததால் மனவேதனை அடைந்த கண்ணன் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இதையடுத்து அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம்குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...