கோவையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

கோவை: கோவையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: கோவையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை ரத்தினபுரி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முருகேசன் (40). இவர் நேற்று மாலை வேடப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு பெண் அவரை தடுத்து நிறுத்தி தன்னிடம் இளம் பெண்கள் இருப்பதாகவும், நீங்கள் ஆசைப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம், என்று அழைத்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தான் சென்று பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றார். பின்னர், இதுகுறித்து முருகேசன் வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பெண் ஆலந்துரை பகுதியை சேர்ந்த சுமதி (30), என்பதும், அதே பகுதியில் வீடு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 19 வயது இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து விபச்சார தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் புரோக்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...