பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை பூங்கா 8 மாதங்களுக்குப் பிறகு திறப்பு..! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா 8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தளங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதி அளித்தது.

இதனையடுத்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை திறக்க நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் பூங்காவிற்கு குடும்பத்தினருடன் வந்தனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவாயிலில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், பூங்காவில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து பொழுதைக் கழிக்க வேண்டும் உள்ளிட்ட அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.



எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆழியார் அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...