கடத்தல் விவகாரத்தில் கோவை தங்க நகை வியாபாரிகளிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

கோவை: கேரள தங்க நகைக் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோவை தங்க நகை வியாபாரிகள் மூன்று பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கேரள தங்க நகைக் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோவை தங்க நகை வியாபாரிகள் மூன்று பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் தங்கக்கட்டி கடத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் மூன்று பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித்குமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. சரித்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கும்பலுடன் கோவை பவிழம் வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வரும் நந்தகுமார் (வயது 42) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் தங்கத்தை ஆபரணங்களாக செய்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி டி.எஸ்.பி சாகுல் ஹமீத் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் கோவைக்கு வந்தனர். அவர்கள் நந்தகுமாரின் வீடு மற்றும் நகைப் பட்டறைகளில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நந்தகுமாரை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நந்தகுமார் அப்ரூவராக மாறுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரிடம் என்.ஐ.ஏ கோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் இந்த விவகாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக கோவை பெரியகடை வீதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் மூன்று பேரின் பெயர்களைத் தெரிவித்தார்.

இதுகுறித்து கேரள அதிகாரிகள் கோவை என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் கோவைக்கு விரைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நகை வியாபாரிகள் 3 பேரையும் பிடித்து ரேஸ் கோர்சில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் தங்கக்கட்டி கடத்தல் குறித்து பல்வேறு தகவல்களை அளித்ததாக கூறப்படுகிறது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...