கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரம்!

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் தொடர்பாக ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது. இதற்காக வெள்ளலூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகள் அளவு எவ்வளவு, என்ன மாதிரியான குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன என்பது குறித்து அளவீடு செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் ட்ரோன் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இங்கு தேங்கியுள்ள குப்பைகளை அளவீடும் பணியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஈடுபட்டனர். தற்போது இதுகுறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெள்ளலூர் குப்பை கிடங்கில் ட்ரோன் கேமரா மூலம் குப்பையின் அளவு சர்வே செய்யப்பட்டுள்ளது. இதன் ஆய்வு அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த பிறகு பயோ மைனிங் மூலம் அதனை அழிக்கும் பணி துவங்கும். இதன் மூலம் தேங்கியுள்ள குப்பைகளின் அளவை குறைக்க முடியும்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...