விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் குண்டுகட்டாக கைது!

கோவை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.


கோவை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறை தடுத்ததால் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.



அப்போது, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...