கூடலூர் அருகே பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்; 3 கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி: கூடலூர் அருகே பந்தலூரில் பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: கூடலூர் அருகே பந்தலூரில் பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

கூடலூர் அருகே கொளப்பள்ளி, 10 லைன்ஸ் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் யூனியன் கவுன்சிலர் ஆனந்த் ராஜா மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.



இந்நிலையில், பந்தலூரில் நேற்று மூவரை கொன்ற காட்டு யானை ரேம்பாடி புரோக்கன் டஸ்கர் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த காட்டு யானையை பிடிக்கும் பணியினை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில், பொதுமக்களை தாக்கி வரும் காட்டு யானையைப் பிடிக்க கலீம், வசிம், பொம்மன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.



அதேபோல, காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க கால் நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட 3 வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

மேலும், காட்டு யானையை தேடும் பணியில் 4 வனத்துறை குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த யானை பிடிபட்டதும் முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...