விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் நாளை முதல் பவுண்டரிகள் வேலைநிறுத்தம்!

கோவை: மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் நாளை (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கோவை: மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் நாளை (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் நாளை (புதன்கிழமை) முதல் மூடப்பட்டு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




கோவை சிறுகுறு பவுண்டரி தொழில் அதிபர்கள் சங்க தலைவர் சிவசண்முக குமார் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 400 குறு மற்றும் சிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் பவுண்டரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. எனவே, மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் இத்தொழிலைச் சார்ந்துள்ள இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தத் தொழிலைச் சார்ந்து இயங்கி வரும் வெட்கிரைண்டர், என்ஜினீயரிங், மோட்டார் பம்புகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...