வேளாண் சட்டத் திருத்த மசோதா திரும்பப்பெற வலியுறுத்தி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி 2-வது நாளாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய விவசாயப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்


திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி 2-வது நாளாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய விவசாயப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து 19-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூரில் தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இன்று 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களை சாட்டையால் அடிப்பதுபோன்று நடித்துக் காட்டினர். நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் பார்த்துச் சென்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...