மூலப்பொருள் விலை உயர்வு கண்டித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை: மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மூலப் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளதைக் கண்டித்தும் இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் கோவை தொழில் கூட்டமைப்பு ஃபோசியா சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தொழில்துறையினரின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் 19 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பான ஃபோசியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின்போது, மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், குறுந்தொழில்களுக்கென பிரத்யேகமாக கடன் உதவித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், கோவையில் மூடப்பட்டுள்ள `செயில்' நிறுவனத்தின் குடோனை உடனடியாக திறக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், சுருளிவேல் உள்ளிட்ட 19 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஏர் கம்ப்ரசர், மோட்டார் பம்ப்செட், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்தன.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...