கோவையில் கைகளை தட்டி கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்...!

கோவை: கோவையில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தி கைகளை தட்டி கோஷங்களை எழுப்பி நூதன முறையில் விவசாய சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தி கைகளை தட்டி கோஷங்களை எழுப்பி நூதன முறையில் விவசாய சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, மூன்று வாரங்களாக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 



இந்நிலையில், கோவையிலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 87 பேர் கைது செய்யபட்டனர்.



நேற்று கைது செய்யபட்டவர்கள், விடுவிக்கபட்ட நிலையில் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கைகளை தட்டியபடி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 52 பேர் கைது செய்யபட்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...